திருச்சி, மதுரை, கோவை, தேனி, சேலம், தஞ்சை அரசு மருத்துவமனைகள் மற்றும் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி நேற்று துவங்கப்பட்டது.
தாய்ப்பால் வங்கி எதற்கு? : உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கடை பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் கட்டாயமாக தாய்ப்பால் தர வேண்டும். புட்டிப்பால், பால் பவுடர் கொடுப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. குறைந்த எடையுடன் குழந்தைகளும், குறை மாத குழந்தைகளும் அதிகமாக பிறக்கின்றன. இக்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும். குழந்தை இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்கலாம். குழந்தை பெற்றவுடன் சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றுகின்றனர். சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரிவர சுரப்பதில்லை, 2, 3 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் போது தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆதரவின்றி விடப்பட்ட குழந்தைகளுக்கும், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தேவைப்படுகிறது. இவர்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கும் தாய் மார்கள், பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தால் அவர்களின் தாய்மார்கள் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் தானம் செய்யலாம்.
இப்படி தாயிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டதும் அது பால் சுத்திகரிக்கும் முறை மூலம் சுத்தம் செய்யப்பட்டும், மேலும் அதில் சிறிய அளவிலான பால் நுண்ணுயிரியல் துறைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறது. மற்ற பால் குளர் சாதன பெட்டியில் 20டிகிரி முதல் 30டிகிரி செல்சியஸ் அளவில் சேகரிக்கப்படுகிறது. நுண்ணிரியல் துறை பரிசோதனை முடிவு கிடைத்ததும், பாக்டீரியா இல்லாத பால் 3 மாதங்கள் வரை சேமிக்கப்படுகிறது. பாக்டீரியா உள்ள பால் உடனே அகற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவை ஏற்படும் போது டீப் ப்ரீசரிலிருந்து சேமித்து வைக்கப்பட்ட பால் எடுத்து சாதா பிரிட்ஜில் வைக்கப்பட்டு பிறகு அறை வெப்ப நிலையில் வைத்து குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது. பால் தானம் தாய்மார்களின் மார்பக வீக்கத்தையும், வலியையும் குறைப்பதால் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் பெறப்பட்டு தேவையுடைய குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதால் அந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குழந்தைகள் ஊட்ட சத்துடன் நல்லபடியாக உயிர் வாழ முடியும். இதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கணிசமான அளவு குறைந்துவிடும். இத்தகவலை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
THANK YOU
todayindia













0 thoughts on “தமிழகம் முழுவதும் தாய்ப்பால் தானம் செய்ய வங்கி 7 இடங்களில் துவக்கம்”