மேட்டூர்,ஆக.30–
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரத்து 809 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 368 கன அடி தண்ணீர் குறைந்து வந்தது. இன்று காலை மேலும் ஆயிரம் கன அடி தண்ணீர் குறைந்து விநாடிக்கு 6 ஆயிரத்து 480 கன அடி தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது பாசன தேவையை கருத்தில் கொண்டும், தண்ணீர் அதிகமாக திறந்து விடவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றும் அணையில் இருந்து மேலும் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் விநாடிக்கு 16 ஆயிரம் 500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
அணைக்கு வருகிற தண்ணீரின் அளவை விட திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரிந்து கொண்டே வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 93.10 அடியாக இருந்தது. மேலும் ஒரு அடி குறைந்து இன்று அணையின் நீர் மட்டம் 92.46 அடியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/08/30102846/16500-cubic-feet-of-irrigation.html













0 thoughts on “பாசனத்திற்காக 16500 கனஅடி திறப்பு: வேகமாக குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்”