ஆவடி: அம்பத்தூரை அடுத்த புதூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியில் வசிக்கும் ரமேஷ்பாபு- ஆண்டாள் தம்பதியின் மகள் ஏ.ஆர்.காவியா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து 100 சதுர மீட்டர் பரப்பளவில் தனது காலால் ஓவியம் வரைந்தார்.இவரது ஓவியத்தின் நோக்கம் எப்படியெல்லாம் கடல் நீர் மாசுபடுகிறது,தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகளாலும், குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளாலும் எவ்வாறு சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பதை வலியுறுத்தியும், ஒலி பெருக்கியினால் ஏற்படும் மாசு உள்ளிட்டவற்றை விளக்கியும், இறுதியில் மரம் வளர்ப்போம் சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என்பதையும் ஓவியமாக வரைந்தார்.
Link: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=80184













0 thoughts on “அம்பத்தூர் பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி”