திண்டுக்கல்:திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அனைத்து பேரூராட்சி அலுவலகங்களிலும் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் 528 பேரூராட்சிகளையும் குப்பையில்லா இடமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. அங்கு 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலிதீனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனியாக வாங்கப்படுகின்றன.மக்கும் குப்பையை இயற்கை உரமாக்கி, அவற்றை மாடித்தோட்டங்களில் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 528 பேரூராட்சி அலுவலகங்களில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சிகள் உள்ளன. இதில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, ஆயக்குடி, சித்தையன்கோட்டை, தாடிக்கொம்பு உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்களில் மாடித்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பேரூராட்சி அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஒவ்வொரு தெருவிலும் தலா 2 வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது: குப்பையில் தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை பயன்படுத்தும் வகையில் மாடித்தோட்டம் அமைக்கிறோம். தனியார் பங்களிப்புடன் மக்களுக்கு துணிப்பைகள் வழங்குகிறோம், என்றார்.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1318884













0 thoughts on “அலுவலக மாடித்தோட்டம்: கலக்கும் பேரூராட்சிகள் ”