வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் குதித்துள்ள, 17 பேரில், மிகவும் வயது குறைந்தவர் என்ற பெருமையை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பாபி ஜிண்டால், 44, பெற்றுள்ளார்.அமெரிக்க மாகாண கவர்னர்னராக பதவியேற்றவர்களில், இவர் தான் மிகவும் இளையவர். இவர், 36 வயதில், லுாசியானா மாகாண கவர்னராக பொறுப்பேற்றார்.அதிபர் தேர்தலுக்கான போட்டியில், இளையவர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தாலும், ஒருவேளை வெற்றி பெற்று அதிபராகும் போது மிகவும் இளையவர் என்ற சிறப்பை பெற முடியாது.ஏற்கனவே, தியோடர் ரூஸ்வெல்ட், 42ம் வயதிலேயே அந்த சாதனையை படைத்துவிட்டார்.குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில், முதல், 10 இடங்களில், பாபி ஜிண்டால் இடம் பெறவில்லை. எனினும், இவருக்கான ஆதரவு அதிகரிக்கும் போது, முதல், 10 இடங்களில் நுழைய முடியும்.குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களில் மிகவும் வயதானவர், நியூயார்க் கவர்னர், ஜார்ஜ் படாகி, 70. அடுத்ததாக, டொனால்டு டிரம்ப், 69, உள்ளார்.ஐயோவா நகரில், பாபி ஜிண்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு, அதிக அளவில் கூட்டம் சேர்ந்தது. இதனால் அவர், பிரபலங்களுக்கான தர வரிசையில், தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1314951













0 thoughts on “அமெரிக்க அதிபர் தேர்தல் இளம் வேட்பாளர் ஜிண்டால் ”