புதுடெல்லி,
2015 உலக ஹாக்கி லீக் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட போட்டியை நடத்த சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் தேர்வாகியுள்ளது. கடந்த ஆகஸ்டு 2014-ல் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3000 பேர் அமரக்கூடிய சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் ராய்ப்பூரில் திறக்கப்பட்டது.
ராய்ப்பூரில் சர்வதேச ஹாக்கி போட்டி நடக்க இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டியில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து (2), ஜெர்மனி (3), பெல்ஜியம் (4), கிரேட் பிரிட்டன் (5), அர்ஜெண்டினா (6), இந்தியா (8), கனடா (13) ஆகிய 8 சர்வதேச அணிகள் பங்குபெறுகின்றன. இந்த 8 அணிகளும் ஏற்கனவே 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இந்த 8 அணிகளும் ஒன்றுகொன்று தங்களது திறமையை நிரூபிக்க கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக இந்த போட்டி கருதப்படுகிறது.
இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த பிரம்மாண்ட சர்வதேச ஹாக்கி போட்டியை உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்கள் தொலைக்காட்சிகள் மூலம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Link: www.DailyThanthi.com/Sports/Hockey/2015/08/18182055/Raipur-to-host-Hockey-World-League-Final.vpf













0 thoughts on “உலக ஹாக்கி லீக் இறுதிப்போட்டியை நடத்த இந்தியாவின் ராய்ப்பூர் தேர்வு ”