BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

2050ல் பெரும்பாலான ஆசியர்கள் மனநல பாதிப்புக்கு ஆளாவார்கள்: ஆய்வில் தகவல்


லண்டன் : உலக அளவில் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆசியர்களே மனநல பாதிப்புக்கு அதிகம் ஆளாவதாகவும், இதே நிலை நீடித்தால் 2050ம் ஆண்டில் பெரும்பாலான ஆசியர்கள் மனநல பாதிப்புக்கு ஆளாவார்கள் எனவும் லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இன்றைய நிலையில், உலக அளவில் அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது உலக அளவில் 46.8 மில்லியன் பேர் டிமன்சியா எனப்படும் ஞாபக மறதி, அல்ஜீமர் உள்ளிட்ட நோய்களின் மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4.1 மில்லியன் பேர் இந்தியர்கள். டிமன்சியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030 ல் 74.7 மில்லியன் பேரும், 2050ல் 131.5 மில்லியன் பேரும் உலக அளவில் டிமன்டியா நோயால் பாதிக்கப்படுவார்கள்.உலக முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் 9.9 மில்லியன் பேர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதாவது ஒவ்வொரு 3.2 விநாடிக்கு ஒருவர் மனநல பாதிப்புக்கு ஆளாகிறார். 2015ம் ஆண்டு கணக்கீட்டின்படி கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களே மனநல பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். கிழக்கு ஆசியாவில் 9.8 மில்லியன் பேரும், மேற்கு ஐரோப்பாவில் 7.4 மில்லியன் பேரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ஆசியாவில் 5.1 மில்லியன் பேருக்கும், வட அமெரிக்காவில் 4.8 மில்லியன் பேருக்கும் மனநல பாதிப்பு உள்ளது. 2015ம் ஆண்டு நிலவரப்படி, டிமன்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட டாப் 10 நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. சீனா முதல் இடத்திலும் (9.5 மில்லியன்), அமெரிக்கா (4.2 மில்லியன்) 2வது இடத்திலும், இந்தியா (4.1 மில்லியன்) 3வது இடத்திலும், ஜப்பான் (3.1 மில்லியன்) 4வது இடத்திலும், பிரேசில் (1.6 மில்லியன்) 5வது இடத்திலும், ஜெர்மனி (1.6 மில்லியன்) 6வது இடத்திலும், ரஷ்யா (1.3 மில்லியன்) 7 வது இடத்திலும், இத்தாலி (1.2 மில்லியன்) 8 வது இடத்திலும், இந்தோனேஷியா (1.2 மில்லியன்) 9வது இடத்திலும், பிரான்ஸ் (1.2 மில்லியன்) 10 வது இடத்திலும் உள்ளன. ஆசியர்களே மனநல பாதிப்புக்கு அதிகம் ஆளாவதால் இதே நிலை தொடர்ந்தால் 2050ம் ஆண்டில் ஆசியாவில் பெரும்பாலானவர்கள் மனநலபாதிப்புக்கு ஆளாவார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link:  http://www.dinamalar.com/news_detail.asp?id=1327569


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “2050ல் பெரும்பாலான ஆசியர்கள் மனநல பாதிப்புக்கு ஆளாவார்கள்: ஆய்வில் தகவல்