மும்பை: புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் களமிறங்குகின்றன. கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய புரோ கபடி லீக் தொடரின் 2வது சீசனில், மொத்தம் 8 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை மோதியதில், யு மும்பா அணி 60 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. தெலுகு டைட்டன்ஸ் (50), பெங்களூரு புல்ஸ் (48), பாட்னா பைரேட்ஸ் (41) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் (38), பெங்கால் வாரியர்ஸ் (27), தபாங் டெல்லி (27), புனேரி பல்தான் (21 புள்ளி) ஆகிய 4 அணிகள் பரிதாபமாக வெளியேறின. நேற்று முன்தினம் இரவு நடந்த விறுவிறுப்பான முதலாவது அரை இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 39-38 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. கடைசி நிமிடம் வரை இழுபறியாக அமைந்த இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அடுத்து நடந்த 2வது அரை இறுதியில், அபாரமாக விளையாடி யு மும்பா அணி 35-18 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் 3வது இடத்துக்கான மோதலில் பாட்னா பைரேட்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில், யு மும்பா - பெங்களூர் புல்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=162923













0 thoughts on “புரோ கபடி லீக் தொடர் : இறுதி போட்டியில் இன்று யு மும்பா - பெங்களூரு புல்ஸ் மோதல்”