தூக்கமின்மை என்பது பரவலாக காணப்படும் பிரச்சனையாகிவிட்டது. இரவில் போதுமான தூக்கம் இல்லை என்றால் ஆரோக்கியம் பெரியளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
நிம்மதியான தூக்கத்திற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக வல்லுனர்கள் கருதுவது :
1. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி மெத்தை அல்லது படுக்கையை வைத்து கொள்ள வேண்டும்.
2. மெத்தையில் அல்லது படுக்கையில் இருந்தப்படி டிவி, கணினி உள்ளிட்டவற்றை பார்க்க கூடாது.
3. வெளிச்சம் தூக்கத்தின் எதிரி என்பதால், மாலை நேரங்களில் பிரகாசமான விளக்குகளின் கீழ் இருப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் பிரகாசமான வெளிச்சம் மெலட்டோனின் (melatonin) அளவையும் இது தூங்க போகும் நேரம் என்பதை உணர்த்தும் மூளையின் சிக்னலையும் குறைக்கிறது.
4. இரவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு மற்றும் காஃபின் நிறைந்த பானங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
5. இரவில் உடற்பயிற்சி செய்யக்கூடாது. எப்போதும் ஒரே தூங்கும் நேரத்தை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும்.
Link: http://www.ns7.tv/ta/node/115210













0 thoughts on “நிம்மதியான தூக்கத்திற்கு ஐந்து வழிகள்”