BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

உலக பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் போராடி தோல்வி: வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார் சாய்னா

சாய்னா நேவால் | படம்: ஏஎஃப்பி  உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், வெள்ளிப் பதக்கத்துடன் புதிய சரித்திரம் படைத்தார்.

  இதன்மூலம், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறைப் படைத்துள்ளார் சாய்னா.

  இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னா, உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கரோலினா மரினை சந்தித்தார்.

  இறுதிச் சுற்றில், சாய்னா நேவால் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் கரோலினாவிடம் தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கரோலினா தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.

  எனினும், இப்போட்டி முழுவதுமே தன் அற்புதமான ஆட்டத் திறனாலும், அசாத்திய போராட்ட அணுகுமுறையாலும் இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் சாய்னா.

  உலக பாட்மிண்டன் போட்டியில் சாய்னாவின் மூலம் இந்தியாவுக்கு 5-வது பதக்கம் கிடைத்துள்ளது. உலக பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிரகாஷ் படுகோன் ஆவார். அவர் 1983-ல் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Link: http://tamil.thehindu.com/sports/உலக-பாட்மிண்டன்-இறுதிச்-சுற்றில்-போராடி-தோல்வி-வெள்ளிப்-பதக்கம்-வென்று-சாதித்தார்-சாய்னா/article7546747.ece


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “உலக பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் போராடி தோல்வி: வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார் சாய்னா