புதுடெல்லி,
வரும் 19-ந்தேதி மலேசியா நாட்டின் மலாக்கா நகரில் பேம்-பிரன்ஸ் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கவுள்ளன. இதில் 19-வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து வீரர்கள் கொண்ட அணி பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மலேசியாவின் பிரென்ஸ் யூனைட்டட், பெல்டா யூனைட்டட் எப்.சி. தாய்லாந்தின் சான்புரி எப்.சி. ஆகிய அணிகளுடன் இந்திய அணியும் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் பெல்டா யூனைட்டட் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இந்த போட்டி குறித்து இந்திய ஜூனியர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் லீ ஜான்சன் கூறுகையில், போட்டியான சூழலில் விளையாடுவது என்பது எந்த ஒரு பிளேயருக்கும் முக்கியமான ஒன்றுதான். இது அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வீரர்களுக்கு பல அனுபவங்களையும் வழங்கும் என தெரிவித்தார்.
மலேசியாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் விபரம் பின்வருமாறு:-
கோல்கீப்பர்கள் - சுக்தேவ் பாட்டீல், ஹவோகிப் ஜெதிதி
தடுப்பாட்டக்காரர்கள் - நிசூகுமார், அமி ரானாவாடே, கபில் போரோ, மொஹம்மது சாஜித் தாட், லல்தாகிமா நூரூதீன்
மிட்பீல்டர்கள் - சுமன் சர்க்கார், மல்சாசுவாலா, பித்யானந்தா சிங், வினித் ராய், லோகன் மொய்ராங்தம்
பார்வேர்டர்கள் - மிலன் பாசுமேட்டரி, ஆசிக் குருனியன், லால்ரின்சுவாலா சாங்தே, மாவிமிங்தாங்கா
Link: www.DailyThanthi.com/Sports/Football/2015/08/17144659/India-under19-football-team-to-participate-in-Asian.vpf













0 thoughts on “ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய ஜூனியர் அணி பங்கேற்பு”