BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

உலக தடகளப்போட்டியில் உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் மீண்டும் சாம்பியன்

பெய்ஜிங் - சீன தலைநகர் பெய்ஜிங்கில் 15வது உலக தடகளப்போட்டி நடைபெற்று வருகிறது. ,இந்த சர்வதேவ பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் மீண்டும் சாம்பியன் ஆனார். பெய்ஜிங்கில் நேற்று நடந்த போட்டியில் 200மீட்டர் போட்டியில் வென்றதன் மூலம் உலக தடகளப்பந்தயத்தில் 10வது தங்கப்பதக்கத்தை வென்று இருக்கிறார்.அவர் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 19.55வினாடிகளில் ஓடி முடித்தார். இந்த சீசனில் அவரது சிறந்த ஓட்ட நேரமாக இது உள்ளது.  தற்போது நடந்து வரும் உலக தடகளப்பந்தயத்தில் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெற்றி வாகை சூடி சாதனை படைத்திருக்கிறார்.

உலக தடகளப்பந்தயத்தில் தற்போது முன்னேறி வரும் காட்லின் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சித்த போதும் அதற்கான வாய்ப்பை உசேன் போல்ட் தரவில்லை. காட்லின் கடந்த 2 சீசன்களில் வெற்றி பெற்ற வீரராக திகழ்ந்தார். கடந்த 7ஆண்டுகளுக்கு முன்னர் உசேன் போல்ட் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். அந்த போட்டியில் இருந்து அவர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வியை இதுவரை தழுவ வில்லை. கடந்த 2013ம்ஆண்டு மாஸ்கோவில்(ரஷ்யா)  நடந்த உலக தடகளப்போட்டியில் உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று இருந்தார்.

அதன்பின்னர் அவர்  காயங்களால் அவதிப்பட்டு வந்தார். மாஸ்கோவில் நடந்த உலக தடகளப்போட்டியில் தொடர்ந்து3வது முறையாக அவர் 200 மீட்டர் போட்டியில் தங்கம் வென்று இருந்தார். தற்போது அவர் 4வது முறை தொடர்ந்துஉலக தடகள போட்டியில் 200மீட்டர் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். பெய்ஜிங் உலக தடகளப்போட்டியில் உசேன் போல்ட் சாம்பியன் ஆனதும் அவரை காட்லின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Link: http://www.thinaboomi.com/2015/08/27/48850.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “உலக தடகளப்போட்டியில் உசேன் போல்ட் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் மீண்டும் சாம்பியன்