ஆலந்தூர், ஆக. 24–
சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் தயாராக இருந்தது. 124 பயணிகள் அதில் ஏற இருந்தனர்.
இந்த நிலையில் விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இன்று காலை 10.30 மணியளவில் மாற்று விமானி மூலம் தாமதமாக சிங்கப்பூர் விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
Link: http://www.maalaimalar.com/2015/08/24141354/singapore-plane-delay.html













0 thoughts on “விமானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம் ”