BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் பாரத் நெட் திட்டம் : முதலமைச்சர் ஜெயலலிதா

சென்னை: மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் பாரத் நெட் எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர் தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளும், ஆப்டிக்கல் பைபர் மூலம் இணைக்கப்படும் என்றார். அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது கிராமங்களில் இருந்தே இணையம் மூலம் பெற்று பயணடையும் வகையில் மத்திய அரசின் பாரத் நெட் என்னும் திட்டத்தை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மாநில அரசே செயல்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். அகன்ற அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணையதள சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து இணையவழி தொலைக்காட்சி சேவைகளும் வழங்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 2015 - 2016-ம் நிதியாண்டின் இ-சேவை திட்டத்தின் கீழ் மேலும் 300 சேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காதுகேளாதோருக்கான அரசு நடுநிலை பள்ளிக்கு ஒருகோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும் எனக் கூறிய அவர் முதுகு தண்டுவடம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=167064


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் பாரத் நெட் திட்டம் : முதலமைச்சர் ஜெயலலிதா