ஆட்டோ ஓட்டுனர்கள், அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் பிற குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டோ ஓட்டுநர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஆட்டோ ஓட்டுநர்கள், பிற குற்றங்களில் ஈடுபட்டாலும் புகார் தெரிவிக்க இலவச கட்டண சேவை 1800 425 5430 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆட்டோ கட்டணம், 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைந்த பட்சமாக 25 ரூபாயாகவும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Link: http://www.ns7.tv/ta/node/124495













0 thoughts on “ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்”