நாகப்பட்டினம், செப். 19–
நாகை மாவடட கலெக்டர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி நாளை (20–ந்தேதி) மற்றும் 4.10.2015 ஆகிய நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பெயர் சேர்த்தலுக்கு படிவம் –6, பெயர் நீக்கல் – படிவம் –7, ஒரு பாகத்திற்குள்ளே பெயர் திருத்தத்திற்கு படிவம் –8 மற்றும் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு (ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்) முகவரி மாற்றம் மற்றும் திருத்தத்திற்கு படிவம் –8யு ஆகியவைகளை பூர்த்தி செய்து வழங்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்ப படிவம் 6யு–ஐ நேரிலோ அல்லது அஞ்சலிலோ வாக்காளர் பதிவு அலுவலரிடம் மட்டுமே வழங்க வேண்டும். 6யு–ஐ விண்ணப்ப படிவத்துடன் பாஸ்போர்ட்டின் முகவரி, போட்டோ உள்ள பக்கம், பாஸ்போர்ட் காலாவதியாகும் காலம் உள்ள பக்கம் ஆகியவற்றின் நகலுடன் அனுப்ப வேண்டும். அயல்நாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்ப படிவத்தை எக்காரணத்தை கொண்டும் சிறப்பு முகாம்களில் வழங்கக்கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி நிலையிலான முகவர்கள் 15.9.2015 முதல் 14.10.2015 வரை கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம்.
சிறப்பு முகாம் நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வழங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வாக்குசாவடி நிலையிலான முகவர்கள் 10 மனுக்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Link: http://www.maalaimalar.com/2015/09/19162041/Special-camp-in-the-polling-ce.html













0 thoughts on “நாகை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது”