BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

விமானத்தில் மது பரிமாற மறுத்த முஸ்லிம் பெண்ணை வேலை நீக்கம் செய்த நிர்வாகம்


இந்நிலையில் இந்நிறுவனத்தில் பணிபுரியும் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த சாரி ஸ்டான்லி(40) என்ற பெண், கடந்த மூன்றாண்டுகளாக எக்ஸ்பிரஸ் ஜெட் நிறுவனத்தில் விமானப் பணிபெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இஸ்லாம் மதத்தின் கொள்கைப்படி மது அருந்தவோ பிறருக்கு பரிமாறவோ கூடாது என்பதை சமீபத்தில் தெரிந்து கொண்ட  சாரி ஸ்டான்லி, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தன்னால்  மது பரிமாற முடியாது என்று கடந்த ஜூன் மாதம் தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் உயரதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து விமான பயணத்தின்  இடையில் யாராவது உங்களிடம் மது கேட்டால் மற்ற பணிப்பெண்களை அழைத்து  அந்த பயணிக்கு மது பரிமாறுமாறு உயரதிகாரிகள் சாரி ஸ்டான்லியிடம் தெரிவித்துள்ளனர். அவரும் அப்படியே செய்து வந்துள்ளார்.

இந்நிலையில்,பயணிகளுக்கு மது பரிமாற  சாரி ஸ்டான்லி மறுப்பதாகவும், இஸ்லாம் மதத்தின் படி, தலையில் ஸ்கார்ப் அணிவதாகவும் அவருடன் பணியாற்றிய பணிபெண் ஒருவர் கடந்த மாதம் தங்களுடைய விமான நிறுவனத்தின்  உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில்  சாரி ஸ்டான்லியை  ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் பின்னர் ஓராண்டு கழித்து அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பணியிடை நீக்கம் செய்த எக்ஸ்பிரஸ் ஜெட் நிர்வாகத்தின் மீது என்னை பணியிடை நீக்கம் செய்தது தவறு என கூறி அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள சமவேலைவாய்ப்பு கமிஷனில்  சாரி ஸ்டான்லி தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

Link: http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/muslim-flight-attendant-says-she-was-suspended-for-refusing-to-serve-alcohol-115090800055_1.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “விமானத்தில் மது பரிமாற மறுத்த முஸ்லிம் பெண்ணை வேலை நீக்கம் செய்த நிர்வாகம்