BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சென்னையில் வரும் 26-ம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா



பாரம்பரிய நெல் வகைகளின் பயன்களையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு வரும் 26-ம் தேதி சென்னையில் பாரம்பரிய நெல் வகைகள் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த திருவிழா தி.நகரைச் சேர்ந்த அஸ்வத் இயற்கை அங்காடி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் 45-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் விழாவில் கலந்துக்கொள்ளும் பொதுமக்களுக்கு பாரம்பரிய நெல்களில் செய்யப்பட்ட உணவு குறைந்த விலையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மட்டும் 5 ஆயிரம் நெல் ரகங்கள் உள்ளன. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாதால் அவை வேகமாக அழிந்து வருகின்றன. இதுவரை தமிழகத்தில் மட்டும் 200 வகையான பாரம்பரிய நெல் வகைகள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மொத்தமாக தென் இந்தியாவில் 600 நெல் ரகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த விழாவின் மூலம் பொதுமக்களிடம் பாரம்பரிய நெல் வகைகளின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் என விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ள அஸ்வத் இயற்கை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு எண்கள்:: 9841611045, 9884166772

http://www.maalaimalar.com/2015/09/21205426/TRADITIONAL-RICE-FESTIVAL-AT-C.html


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சென்னையில் வரும் 26-ம் தேதி பாரம்பரிய நெல் திருவிழா