லண்டன்: பாரம்பரியமிக்க மென்சா நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை (ஐ.க்யூ) தேர்வில், அறிவியல் மேதைகளான ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றதை விட அதிக மதிப்பெண் பெற்று இந்திய வம்சாவாளி சிறுமி லிடியா செபாஸ்டியன் (வயது 12) முறியடிக்க முடியாத சாதனையை படைத்துள்ளார். பொது அறிவுத்திறனை மதிப்பிடும், உலகின் மிக பழமையான மென்சா நிறுவனம் அறிவுக்கூர்மை தொடர்பான கேட்டெல் III-B தேர்வை லண்டனில் நடத்தியது. 150 கேள்விகள் கேட்கப்படும் இப்போட்டியில், இந்திய வம்சவாளி சிறுமி லிடியா அதிகபட்சமான 162 மதிப்பெண்ணையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.இயற்பியல் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்களான அறிவியல் மேதைகள் ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோர் கூட இத்தேர்வில் 160 மதிப்பெண் மட்டுமே பெற்றவர்கள். அவர்கள் சாதனையை முறியடித்துள்ள லிடியா, 162 மதிப்பெண் பெற்று முறியடிக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். எஸ்ஸெக்ஸ் நகரில் வசிக்கும் லிடியாவின் தந்தை அருண் செபாஸ்டியன் மருத்துவமனை ஒன்றில் கதிவீச்சு துறை நிபுணராக (ரேடியோலாஜிஸ்ட்) பணியாற்றி வருகிறார். அவர் கூறுகையில், ‘என் மகள் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே பேச ஆரம்பித்து விட்டாள். 4 வயதிலேயே வயலின் இசைக்க கற்றுக் கொண்டாள். அவளாக இன்டர்நெட்டில் இருந்து ஐ.க்யூவை வளர்த்துக் கொண்டாள். ஹாரி பாட்டர் புத்தகத்தின் 7 பாகங்களையும் 3 முறைக்கு மேல் படித்து விட்டாள்’ என பெருமிதத்துடன் கூறுகிறார்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=165623













0 thoughts on “ஐன்ஸ்டீனை விட அதிக மதிப்பெண் மென்சா ஐ.க்யூ தேர்வில் இந்திய சிறுமி சாதனை”