அரியலூர்: மூன்று ஏக்கர் காடு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அது ஏரி. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் புதுக்குடிக் கிராமத்துக்கு வாழ்வளித்து வந்த அந்த ஏரியில் 10 ஆண்டாக ஒரு சொட்டு நீர் கிடையாது. ஏரியில் சீமைக்கருவேல மரங்களும், காட்டாமணக்குச் செடிகளும் மண்டிக்கிடந்தன. தூர்வாரி பல ஆண்டு காலமாச்சு. நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது. தண்ணீருக்கு மக்கள் சிரமப்பட்டனர். கால்நடைகள் வளர்ப்பதும் கஷ்டமானது. ஊராட்சியை நம்பாமல் அங்கு படித்த இளைஞர்கள், அரிவாள், கோடரி சகிதம் தாங்களே களமிறங்கினர். அனைத்தையும் வெட்டி அகற்றி தீவைத்து எரித்தனர். இருப்பினும் மரங்கள் மீண்டும் துளிர்க்கத் துவங்கின. பொக்லைன் மூலம் வேரோடு அகற்றுவதே சிறந்தது. ஆனால், அதற்கு அனுமதி பெற வேண்டியிருந்தது. கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். ஏரி நிறைந்து ததும்புவதைக் காணப்போவது நிஜம் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.
Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=166139













0 thoughts on “10 ஆண்டுகளாக வற்றி இருக்கும் ஏரி: ஊரின் படித்த இளைஞர்களே ஏரியை தூர்வாறினர்”