BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான வீரர்கள் ஏலப்பட்டியல்: ஒரு பார்வை

ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான வீரர்கள் ஏலப்பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் யார் எவ்வளவு தொகைக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம்.

6 அணிகள் கலந்துகொள்ளும் நான்காவது ஹாக்கி இந்தியா லீக் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான வீரர்களின் ஏலம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் 135 இந்திய வீரர்களும், 137 வெளிநாட்டு வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். ஒவ்வொரு அணியிலும் 12 இந்தியர், 8 வெளிநாட்டு வீரர்கள் என்று 20 வீரர்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதில் இந்தியாவின் நடுக்கள ஆட்டக்காரரான நட்சத்திர வீரர் சர்தார் சிங் பஞ்சாப் வாரியர்ஸ் அணிக்காக 58,000 டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரது அடிப்படை ஏலத் தொகை 20,000 டாலராகும்.

மற்றொரு இந்திய வீரரான ருபிந்தர் பால் சிங் டெல்லி அணிக்கு 68,000 டாலருக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார். Dharamvir Singh கலிங்கா லேன்சர் அணிக்கு 60,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளார். இந்தியாவின் அமித் ரோஹிதாஸ் 31,000 டாலருக்கு கலிங்கா லேன்சர் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மனி வீரர் Florian Fuchs மும்பை அணிக்கு 96,000 டாலருக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார். மற்றொரு ஜெர்மனி வீரர் Moritz Fürste அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனார். இவரை 1 லட்சத்து 5 ஆயிரம் டாலருக்கு கலிங்கா லான்சர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இவருக்கு அடிப்படை விலையாக 30 ஆயிரம் டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 2012ம் ஆண்டு நடந்த ஏலத்தின்போது, பியூயர்ஸ்டை ராஞ்சி ரினோஸ் அணி 75 ஆயிரம் டாலருக்கு ஏலம் எடுத்து அணியின் கேப்டனாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெர்மனியின் Tobias Hauke உத்திரப் பிரதேச அணிக்காக 96,000 டாலருக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் Matthew Swann மும்பை அணிக்கு 75,000 டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் devob manchester 27,000 டாலருக்கு டெல்லி அணிக்காக ஏலத்திற்கு விடப்பட்டுள்ளார்.

Link: http://www.ns7.tv/ta/node/128305


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “ஹாக்கி இந்தியா லீக் தொடருக்கான வீரர்கள் ஏலப்பட்டியல்: ஒரு பார்வை