ஏமனில் துறைமுகம் ஒன்றில் சவுதி கூட்டுப்படையினர் இன்று நடத்திய வான் வழித்தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக. அந்நாட்டு ராணுவத்தினருடன் இணைந்து சவுதி கூட்டுப்படையினர் கடந்த சில நாட்களாக தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஏமனில் உள்ள ஹொடெய்டா துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கொள்ளையர்களையும் ஹவுதி கிளர்ச்சியாளர்களையும் குறிவைத்து சவுதி கூட்டுப்படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தினர்.
அப்போது துறைமுகத்தையொட்டியுள்ள கடல் பகுதியில் 2 படகுகளில் சென்றுகொண்டிருந்த இந்தியர்களுக்கு தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இதில் 20 இந்தியர்கள் பலியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Link: http://www.ns7.tv/ta/node/123593













0 thoughts on “ஏமனில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் 20 இந்தியர்கள் பலி”