இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1866 இந்திய தேர்தல் கமிஷனில் கடந்த (2014) ஆண்டில் மட்டும் 239 புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்ததையடுத்து, பதிவு பெற்ற இந்திய அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1866 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 56 கட்சிகள் மட்டுமே தேசிய அளவிலும், மாநில அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இவற்றில் 464 கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.எனினும், அங்கீகரிக்கப்படாத பல கட்சிகளின் வேட்பாளர்கள் தனிப்பட்ட சின்னங்களுக்கு உரிமை கோர முடியாது. தேங்காய், ஜன்னல், செருப்பு, பாட்டில் போன்ற தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ள 84 சின்னங்களில் மட்டுமே அவர்கள் போட்டியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=148579













0 thoughts on “இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1866”