இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருவதில் முன்னிலையில் இருந்து வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று வர்த்தகரீதியாக ஹை ஸ்பீடு 4G சேவைகளை இந்தியா முழுவதும் துவங்கியுள்ளது. ஏற்கனவே, குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து சோதனை ஓட்டமாக இந்த சேவையை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் 296 நகரங்களில் 4G சேவையை வழங்குகிறது.
மொபைல் போன்கள், டாங்கிள்கள், 4G ஹாட்ஸ்பாட்டுகள், வை-ஃபை டாங்கிள்கள் என அனைத்து ஸ்மார்ட் கருவிகளிலும் இந்த சேவைகளை வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் 4G இண்டர்நெட் சேவையை ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தனது 4G சேவையை துரிதப்படுத்தியிருக்கிறது ஏர்டெல்.
Link: www.DailyThanthi.com/News/India/2015/08/06191912/Airtel-commercially-launches-4G-services-in-296-towns.vpf













0 thoughts on “இந்தியா முழுவதும் 296 நகரங்களில் 4G சேவையை துவங்கியது ஏர்டெல் ”