நேற்று நடைப்பெற்ற ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினார்கள். 18-வது நிமிடத்தில் இந்திய அணியின் சிங்லென்சானா முதல் கோலை அடித்தார்.
இந்த கோலுக்கு பதில் கோல் அடிக்க பிரான்ஸ் வீரர்கள் முயன்றனர். ஆனால், இந்திய வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் முயற்சியை தடுத்தனர். இதனால் முதல் காலிறுதிப் பகுதியில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
எஸ்.வி. சுனில் 28-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் இந்தியா 2-வது காலிறுதியின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆகவே இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி 6-ம் தேதி நடைப்பெற இருக்கிறது.
Link: http://www.ns7.tv/ta/node/105293
via http://j.mp/tamil_news













0 thoughts on “பிரான்ஸ் அணிக்கு எதிரான முதல் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி”