BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கடன் இல்லாமல் கல்வி கற்க நடமாடும் மரவீடு கட்டி குடியேறிய அமெரிக்க மாணவர்

நியூயார்க்: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 25 வயதான ஜோயல் வெப்பர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். கல்லூரி உள்ள பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்தால் கடன் அதிகமாக கூடிவிடும் என்பதை கருத்தில் கொண்ட மாணவர் ஜோயல், கல்லூரிக்கு அருகிலுள்ள அகன்ற புல்வெளியில் சுமார் 1 வருடம் உழைத்து, சொந்தமாக ஒரு நடமாடும் மர வீட்டை உருவாக்கியுள்ளார்.இப்பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு படிக்கும் ஜோயல் வெப்பர் (25) தனது குடும்பம் சற்று ஏழ்மை நிலையில் உள்ளதை கருத்தில் கொண்டு கல்லூரிக்கு அருகில் வாடகை வீட்டில் குடியேறுவதை தவிர்த்து விட்டார். அப்பகுதியில் சாதாரண சிறிய வீட்டுக்கே சுமார் 800 டாலர்கள் வாடகை தர வேண்டும். வாடகைக்கு வீடு எடுத்தால் அதற்காக கடன் வாங்கி, அந்த கடனை அடைக்க எதிர்காலத்தில் கஷ்டப்படும் சூழல் வரும் என புரிந்து கொண்டார்.எனவே கல்லூரிக்கு அருகில் உள்ள வசதியானவர்களின் வீடுகளில் புல்தரைகளை சீர்படுத்தும் பணி, குழந்தைகளை பராமரிக்கும் ‘பேபி சிட்டிங்’ வேலை என கவுரவம் பார்க்காமல் கிடைத்த வேலையை எல்லாம் செய்தார். அப்படி இரண்டு ஆண்டுகளாக சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் சில நல்ல உள்ளங்கள் அளித்த மூலப்பொருட்களை கொண்டு சுமார் 20 ஆயிரம் டாலர்கள் செலவில் 145 சதுரடி மர வீட்டைஉருவாக்கியுள்ளார். இந்த அழகிய மரவீட்டை இரண்டு பரண்களாக (தளம்) இவர் பிரித்துள்ளார்.முழுமையான கழிப்பறை, மின்வசதி, கியாஸ் அடுப்புடன் கூடிய சமையல் அறை, குளிப்பதற்கு ஷவர், கட்டிலுடன் அமைந்த படுக்கையறை என ஒரு உல்லாச விடுதிக்குரிய அத்தனை அம்சங்களுடன் இந்த மரவீட்டை இவர் மிக அழகாக உருவாக்கியுள்ளார். இந்த மரவீட்டை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி செல்லும் அளவுக்கு நான்கு சக்கரங்களையும் பொருத்தியுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சொந்த ஊரான டல்லாஸ் பகுதியில் இந்த நடமாடும் வீட்டை நிறுத்தி வாழ்ந்துவரும் ஜோயல் வெப்பர் வரும் கல்லூரி விடுமுறையின்போது இங்கிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் உள்ள ஆஸ்டின் நகருக்கு நகர்த்தி செல்ல திட்டமிட்டுள்ளார். Link: http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=154330 via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கடன் இல்லாமல் கல்வி கற்க நடமாடும் மரவீடு கட்டி குடியேறிய அமெரிக்க மாணவர்