பிண்ட்: பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி.,யின் பிண்ட் நகரில், நாய்க்கு, ஆதார் அடையாள அட்டை வாங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.ஆதார் அடையாள அட்டை நிறுவனத்தில் பணியாற்றும் நபர் ஒருவர், தன் நாய்க்கு, ஆதார் அடையாள அட்டை வாங்கி உள்ளார். இதை அறிந்து பொதுமக்கள் கொதித்தெழுந்ததும், அட்டை வாங்கிய, அசம் கான், 32, என்ற நபர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த அடையாள அட்டையில், நாயின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. பெயர் என்ற இடத்தில், டாமி சிங் என்றும், தந்தை பெயர், ஷெரு சிங் என்றும், ஆண் என்றும், பிறந்த தேதியாக, 26/11/2009 என்ற தேதியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நாய்க்கு, பயோமெட்ரிக் அடையாளம் எடுக்கப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1288611 via http://j.mp/tamil_news













0 thoughts on “நாய்க்கு ''ஆதார்'' அட்டை”