மகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட தந்தை, மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்து கொலை சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் பகுதியில் இளம் பெண்ணை சிலர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் தந்தை அவர்களைத் தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெற்று வந்தவரை, தரதரவென வெளியே இழுத்து வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து பெண்ணின் தந்தையை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கொல்லப்பட்டவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/88600 via http://j.mp/tamil_news
Home
உ.பியில் மகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட தந்தை எரித்து கொலை
உ.பியில் மகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட தந்தை எரித்து கொலை
By Unknown 5:28 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “உ.பியில் மகளை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட தந்தை எரித்து கொலை”