BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

அடுத்த வருடம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் அறிமுகமாகின்றது முதல் ஓட்டுனரற்ற ரயில்!

இன்று வியாழக்கிழமை டெல்லி மெட்ரோ ரயில் சேவை தனது முதல் ஓட்டுனர் தேவையில்லாத ரயிலைப் பெற்றுள்ளது. தென்கொரியாவின் சங்வானில் தயாரிக்கப் பட்ட இந்த புதுயுகத்துக்கான ரயில் இன்று வியாழக்கிழமை முகுந்த்பூர் டிபோட்டினை வந்தடைந்தது.

குஜராத்திலுள்ள முந்த்ரா தளத்தை கடல் மார்க்கமாக வந்தடைந்த இந்த ரயில் டெல்லிக்கு வீதி வாயிலாகவே கொண்டு வரப் பட்டது.

மேலும் இதுவரை ஓட்டிப் பரிசோதிக்கப் படாத இந்த ரயிலை டெல்லி மெட்ரோ ஆப்பரேஷன் கட்டுப்பாட்டு நிலையம் இயக்கவுள்ளது. இந்த வகை ஓட்டுனர் இல்லாத ரயில்கள் இனிவரவுள்ள மாஜ்லிஷ் பார்க் ஷிவ் விஹார் (58.5Km உடைய லைன் 7) மற்றும் ஜானக்புரி மேற்கு தாவரவியல் பூங்கா (38.2Km உடைய லைன் 8) ஆகியவற்றுக்கு இடையே Phase 3 corridors களில் 2016 இறுதியில் இருந்து இயங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் சுமார் 6 பெட்டிகள் கொண்ட 20 ஓட்டுனரற்ற மெட்ரோ ரயில்கள் தென் கொரியாவில் உற்பத்தி செய்யப் பட்டு இறக்குமதி செய்யப் படும் எனவும் மேலும் 61 ரயில்கள் பெங்களூரிலுள்ள பாரத் ஏர்த் மூவர்ஸ் லிமிடட் (BEML) இனால் கட்டமைக்கப் படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் சுமார் 2280 பயணிகளுடன் பயணிக்கத் தக்கவை ஆகும்.

இந்த ஓட்டுனரற்ற அனைத்து மெட்ரோ ரயில்களிலும் உள்ளேயும் வெளியேயும் CCTV கமெராக்கள் பொருத்தப் பட்டிருக்கும் என்பதுடன் இவற்றில் இருந்து பெறப்படும் காணொளிகள் கட்டுப்பாட்டு மையத்தால் நேரடியாகக் கையாளாப் படக் கூடியதாகவும் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “அடுத்த வருடம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையில் அறிமுகமாகின்றது முதல் ஓட்டுனரற்ற ரயில்!