இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
மத்திய அரசின் தவறான மக்கள் விரோத நடவடிக்கைகளையும், இந்துத்துவ செயல்பாடுகளையும் எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டதற்காக, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்புக்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது எனக்கூறி எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும், நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன. ஐ.ஐ.டி மற்றும் மத்திய அரசை எதிர்த்து முற்றுகை மற்றும் கண்டனப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகளைத் தொடர்ந்து அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்.
சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்கிறது. மேலும், வருங்காலங்களில் கருத்துரிமைக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை ஐ.ஐ.டி. மற்றும் மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது எனவும், மத்திய அரசு விமர்சனங்களை விமர்சனங்களாகவே பார்க்க வேண்டுமே தவிர இதுபோன்ற ஜனநாயக விரோத போக்குடன் நடந்துகொள்ளக் கூடாது எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.













0 thoughts on “சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடை நீக்கம்! – எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பு! ”