புதுடெல்லி, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இதில் டோனி, கோலி, அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜிம்பாப்வே பயணம் இந்திய கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி ஜிம்பாப்வேக்கு புறப்படுகிறது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் (ஜூலை 10, 12, 14) இரண்டு 20 ஓவர் போட்டிகளிலும் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படுகிறது. தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதாலும், ஜிம்பாப்வே சிறிய அணி என்பதாலும் இந்த தொடருக்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், விராட் கோலியும் இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி) விளையாடுகிறார்கள். கேப்டன் டோனிக்கும் பணிச்சுமை அதிகம். ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு உலக கோப்பை மற்றும் மற்றும் கடினமான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இவ்வாறு ஓய்வு கொடுக்கும் போது டெஸ்ட் கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் அடுத்து வரும் கடினமான இலங்கை டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராக முடியும்’ என்றார். கேப்டன் பதவி யாருக்கு? டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் கேப்டன் பதவி ரோகித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கும். இதில் ரோகித் சர்மாவுக்கு, ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் இருப்பதால் அவருக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. ரஹானே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ராபின் உத்தப்பா ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது. ஸ்டூவர்ட் பின்னி, அம்பத்தி ராயுடு, மொகித் ஷர்மா உள்ளிட்டோர் அணியில் தொடருவார்கள். சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு பர்வேஸ் ரசூல், ஹர்பஜன்சிங் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. முன்னதாக ஒளிபரப்பு நிறுவனமான டென் ஸ்போர்ட்சுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே நீடித்த பிரச்சினை காரணமாக, இந்தியா-ஜிம்பாப்வே தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் நிலவியது. இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு பார்படோசில் நடந்த ஐ.சி.சி. வருடாந்திர கூட்டத்தின் போது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி அதில் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதால், இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Link: www.DailyThanthi.com/Sports/Cricket/2015/06/29013727/Dhoni-Kohli-decided-to-retire.vpf via http://j.mp/tamil_news
Home
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்க முடிவு?
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்க முடிவு?
By Unknown 4:30 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு டோனி, கோலிக்கு ஓய்வு அளிக்க முடிவு?”