BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கணவன்–மனைவி பலி

திருவிடைமருதூர், ஜூன். 19– கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி நெடுங்கொல்லை காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (45). இவரது மனைவி விஜயலெட்சுமி (40). இருவரும் செங்கல் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். அவருக்கு இன்னும் 25 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க கணவன்–மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் வந்தனர். அங்குள்ள சென்னை சாலையில் சென்ற போது பலத்த மழை பெய்தது. அப்போது குணசேகரன் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கடலூரிலிருந்து கும்பகோணத்திற்கு வேன் வந்தது. இந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து ஏற்பட்டதும் வேன் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். கும்பகோணம் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான கணவன்–மனைவி உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு சம்பவம்... திருவாரூர் மாவட்டடம் நீடாமங்கலம் அருகே உள்ள சேரன்குளத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (24). அதே பகுதியை சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் நண்பர்கள். நேற்று மாலை விக்னேஸ்வரன் கோம்பூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்றார். பின்னர் சித்தியின் மகன்கள் பாலு விஸ்னோ (8) பாலபாரதி (6) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மீண்டும் சேரன் குளம் வந்தார். கூத்தா நல்லூர் பனங்காட்டான் குடி என்ற இடத்தில் வந்த போது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறுவன் பால பாரதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த விஜய், பாலு விஸ்னோ ஆகியோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கூத்தா நல்லூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். Link: http://www.maalaimalar.com/2015/06/19121314/motor-cycle-accident-husband-w.html via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கணவன்–மனைவி பலி