புதுடில்லி, ஜூன் 7_ பன்னாட்டுக் கல்வி ஓட்டத்திற்கு ஏற்ற வகை யில் கல்வியில் மாற்றம் கொண்டு வராமலும், கல்வியில் முக்கிய பிரிவு களுக்குப் போதிய நிதி ஒதுக்காமலும், அதே நேரத்தில் மதம் சார்பான கல்விக்கு அதிக நிதி ஒதுக் குவதும் சரிதானா என்று நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில், நியாய மான வினாக்களை எழுப் பிய பல்கலைக் கழகங் களின் தலைமை நிருவாகி மீது, மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை நடவ டிக்கை எடுக்கத் துடிக் கிறது. உயர்கல்வி பாடத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய மே மாதம் 26 ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு தலைநகர் டில்லியில் கூடி யது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பல்கலைக்கழகங்களின் தலைமை நிர்வாகி வேத் பிரகாஷ் அரசின் போக்கு குறித்து விமர்சனம் செய் திருந்தார். அவர் கூறிய தாவது:
அரசு பன்னாட்டு கல்வி ஓட்டத்திற்கு ஏற்ப இந்திய கல்வித் திட்டத் தில் மாற்றம் கொண்டு வருவதில் அக்கறை காட்டவில்லை. பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் அவசிய மற்ற பாடங்களைச் சேர்ப் பது போன்றவைகளில் முனைப்புக் காட்டுதல் கூடாது. மேலும் பல் கலைக்கழக மானியங்கள் ஒதுக்கீட்டின் போது முக்கியமான துறைகளுக்கு நிதி ஒதுக்காமல் மதம் சார்பான கல்விகளுக்கு அதிக நிதி வழங்குவது குறித்தும் கேள்விகளை எழுப்பி இருந்தார். மேலும் அரசு பல் கலைக்கழகங்களுக்காக ஒதுக்கும் நிதி, நேரடியாக எங்களிடம் வராமல் துறைக்கு தொடர்பில்லாத வர்களிடம் சென்று அவர்கள் தான் இன்ன இன்னதிட்டங்களுக்கு என்று ஒதுக்கித் தரும் சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். விளக்கம் கேட்கப்பட்டது
மே மாதம் 26 ஆம் தேதி நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வேத் பிரகாஷ் விடுப்பிற்குச் சென்று விட்டார். இந்த நிலையில் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது அவருக்கு மனிதவளத் துறையின் செயலாளர் எச்.எச்.மெஹந்தி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு முன்பு ஆலோ சனைகளைத் தெரிவிக்கும் முன்பு மனிதவளத் துறை யின் கல்வி இயக்குநரிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும், அதே நேரத்தில் என்ன பேசப் போகிறேன் என்பதையும் எழுத்து மூலம் தெரிவித் திருக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற நிலைக்குழு போன்ற முக்கியமான உயர் குழுக்களின் முன்பு பேசும் போது சில விதி முறைகள் பின்பற்றப்பட வேண்டும், ஆனால் நீங்கள் இதில் எந்த ஒரு விதிமுறையையும் கடை பிடிக்கவில்லை. அமைச்சரவை எடுத்த முடிவிற்க்கு ஏதாவது ஆலோசனை கூற வேண் டுமென்றால், முதலில் உள் துறை அமைச்சரிடமும், செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய வில்லை. கல்வித் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு பற்றி விவாதிக்க பல் கலைக்கழகம், குழு ஒன்றை அமைத்துள்ளது. நீங்கள் அதன் பிரதிநிதி யும் கிடையாது; அப்படி இருக்க நீங்கள் எப்படி நிலைக்குழு முன்பு உங் களுக்குத் தொடர்பில்லாத விவரங்களைப் பற்றிப் பேசினீர்கள் என்பது குறித்து எங்களுக்கு விளக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக்கடித விவகாரம் வெளியானது தொடர் பாக பல்கலைக்கழக நிர் வாகக் குழுவினரிடையே கடுமையான அதிருப்தி நிலவிவருகிறது. பல் கலைக்கழக மூத்த அதி காரி ஒருவர் குறிப்பிடும் போது பல்கலைக் கழ கங்களுக்கான தலைமை நிர்வாகிக்கு நிலைக்குழு முன்பு பேச அனைத்து அதிகாரமும் உள்ளது. அதே நேரத்தில் அவர் கல்வித்துறை செயலாள ருக்குத் தேவையான ஆலோசனைகளையும் நிலைக்குழு முன்பு வழங் கலாம்; விதிப்படிதான் வேத் பிரகாஷ் தன்னு டைய ஆலோசனைகளை நிலைக்குழு முன்பு வைத் துள்ளார். அமைச்சரக செயலாளர்களுக்கு உதவி யாளர்களாக பணிபுரிய தலைமை நிர்வாகி ஒன்றும் செயலாளருக்கான உதவி யாளர் கிடையாது, மனித வளதுறை அமைச்சரின் போக்கு கல்வித் துறையை ஏளனப்படுத்துவது போல் உள்ளது. பல்கலைக் கழகங்களுக்காக வழங் கப்படும் மானியம் குறித்து தலைமை நிர்வாகி பேசா மல் யார் பேசுவார்கள்? என்று கேள்வி எழுப்பி யுள்ளனர். சர்ச்சைக்குரிய இக் கடிதம் குறித்து மனித வளத்துறை விளக்க மளித்த போது பல் கலைக்கழகங்களுக்கான தலைமை நிர்வாகி வேத் பிரகாஷ், தான் தோன்றித் தனமாக நடந்து கொண் டுள்ளதாகவும் அதற்கான விளக்கக் கடிதம் அனுப் பியது சரியே, இக்கடிதத் திற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் தொடர் பில்லை என்று கூறி யுள்ளதாம்.













0 thoughts on “கல்வித் திட்டத்தில் மதவாதம் புகுத்தப்படுகிறதுஎத்திசையில் செல்லுகிறது மோடி தலைமையிலான அரசு”