கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக போச்சம்பள்ளியில் 33.3 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலைமுதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகல் முதல் மேக மூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென மாலை சுமார் 5 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக மா அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள போச்சம்பள்ளி பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த திடீர் மழையால் மாந்தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து காய்கறிகள் விரைவில் பெருக்கமடையும் நிலையில் மா விவசாயிகளும், குத்தகை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அத்துடன் அந்த பகுதியில் குளிர்காற்று வீசுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி













0 thoughts on “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை”