மேட்டூர், ஜூன். 5–காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4900 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று காலை 7ஆயிரத்து 58 கன அடியாக அதிகரித்தது.இந்த நிலையில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்தும் குறையத் தொடங்கி உள்ளது.இன்று காலை 5 ஆயிரத்து 508 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 72.64 அடியாக இருந்தது. இன்று காலை இது 72.99 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 73 அடியை தொட்டது.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
Home
மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை தொட்டது
மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை தொட்டது
By Unknown 11:38 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியை தொட்டது ”