கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான சேவையை தொடங்க மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடை தேர்தலையொட்டி, மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் சற்று தாமதமானது. இந்நிலையில், இந்த ரயில் சேவையை தொடங்க மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சகத்திடம் நேற்று தமிழக அரசு அனுமதி கோரியது. மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்னும் கால தாமதம் செய்வது சரியில்லை என முடிவு செய்த மத்திய அரசு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி அளித்துள்ளது. நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு காணொளி காட்சி மூலம் தொடங்கவிருக்கும் இந்த விழாவில் பங்கேற்க, மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், திங்கள்கிழமை நாயுடு அமெரிக்கா செல்வதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று தமிழக அரசிடம் தெரிவித்து விட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், மத்திய நகர்புற செயலாளர் மதுசூதன் பிரசாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Link: http://www.ns7.tv/ta/node/74559 via http://j.mp/tamil_news
Home
மெட்ரோ ரயில் சேவையை நாளை மறுநாள் துவக்குகிறார் ஜெயலலிதா சென்னை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரயில் சேவையை நாளை மறுநாள் துவக்குகிறார் ஜெயலலிதா சென்னை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
By Unknown 2:01 AM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “மெட்ரோ ரயில் சேவையை நாளை மறுநாள் துவக்குகிறார் ஜெயலலிதா சென்னை மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை மறுநாள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.”