BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

சகாயத்தின் 15-ம் கட்ட விசாரணை முடிந்தது போலி முகவரியில் பல நிறுவனங்கள் செயல்பட்டது கண்டுபிடிப்பு

மதுரை, கிரானைட் முறைகேடு குறித்த சகாயத்தின் 15-ம் கட்ட விசாரணை நேற்றுடன் முடிந்தது. விசாரணையின் போது, போலி முகவரியில் பல நிறுவனங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அம்பலம் மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது விசாரணை கடந்த ஆண்டு (2014) டிசம்பர் மாதம் 3-ந்தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட விசாரணையிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. அதில் முக்கிய குற்றச்சாட்டாக கிரானைட் நிறுவனங்கள் அனுமதி பெற்ற அளவினை விட கூடுதல் கற்களை வெட்டி எடுத்தது, புராதன சின்னமான மலைகளில் இருந்து அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை வெட்டி கடத்தியது, கண்மாய், ஓடை போன்ற அரசு நிலங்களை ஆக்கிரமித்தது போன்ற முக்கிய குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. போலி முகவரி இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக அரசுத் துறைகளிடம் இருந்து சகாயம் பதில் அறிக்கைகளை கேட்டு பெற்று வருகிறார். குறிப்பாக வருவாய், வனத்துறை மற்றும் போலீஸ் துறையினர் சகாயம் குழுவினரிடம் அறிக்கை கொடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சகாயம் 15-ம் கட்ட விசாரணை நடத்தியபோது, பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் போலியான முகவரி கொடுத்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருமான வரியும், வணிகவரியும் செலுத்தாமல் மோசடி செய்து உள்ளனர். 2,500 பக்க ஆவணங்கள் குறிப்பாக திண்டுக்கல் நகரில் செயல்படுவதாக பல நிறுவனங்கள் முகவரி கொடுத்து இருந்தன. அந்த நிறுவனங்கள் மதுரை குவாரிகளில் அதிக அளவில் கற்களை வெட்டி எடுத்து வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி உள்ளன. எனவே திண்டுக்கல் நகரில் பதிவு செய்யப்பட்ட அந்த நிறுவனங்கள் எவ்வளவு வணிகவரி செலுத்தி உள்ளன என்ற தகவலை நேரில் வந்து தருமாறு, சகாயம் திண்டுக்கல் வணிகவரித்துறை ஆணையருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தார். அதன்படி திண்டுக்கல் வணிகவரி அலுவலர் ஜெய்சங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் 15 நிறுவனங்கள் செலுத்திய வணிக வரி தொடர்பாக 2 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்தார். இந்த ஆவணங்களை சகாயம் குழுவினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். 15-ம் கட்ட விசாரணையை நேற்றுடன் முடித்த சகாயம், இன்னும் சில நாட்களில் 16-ம் கட்ட விசாரணையை தொடங்க உள்ளார். இன்னும் சில கட்ட விசாரணைக்கு பின், ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். Link: www.DailyThanthi.com/News/State/2015/06/27003700/The-trial-ended-with-the-15th-sagayam.vpf via http://j.mp/tamil_news


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “சகாயத்தின் 15-ம் கட்ட விசாரணை முடிந்தது போலி முகவரியில் பல நிறுவனங்கள் செயல்பட்டது கண்டுபிடிப்பு