ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்து விட்டு திரும்பிய வேட்பாளர் டிராஃபிக் ராமசாமி, ஆதரவாளர்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டார். சமூக ஆர்வலர் சசி பெருமாள் உள்ளிட்டோர், டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7:45 மணி அளவில், அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது வாகனத்தின் மீது சிலர் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த டிராஃபிக் ராமசாமி சம்பவ இடத்திற்கு வந்து தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சசி பெருமாள் உள்ளிட்டோர் புகார் செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 27ம்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில், அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராக்பிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர். Link: http://www.ns7.tv/ta/node/70039 via http://j.mp/tamil_news
Home
ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: டிராஃபிக் ராமசாமி சாலை மறியல்
ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: டிராஃபிக் ராமசாமி சாலை மறியல்
By Unknown 5:17 PM
TAG
nanomag
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.













0 thoughts on “ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: டிராஃபிக் ராமசாமி சாலை மறியல் ”