1995 தமுமுக ஆரம்பித்து பல சோதனைகளை சந்தித்தபோது தமுமுககாரன் என்று சொன்னாலே குடும்பத்திலும், சமுதாயத்திலும் காவல்துறையிலும் பல நெருக்கடிகள் என்ற சூழலில் அன்சாரியை தமிழகத்துக்கு தெரியாது, நம் சமுதாயத்துக்கு தெரியாது. 1999ல் நடைப்பெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் மேடையேற்றப்பட்டபோது தான் உறுப்பினர்களாகிய எங்களுக்கே தெரியும். பேராசிரியரின் தலைமையிலான மாநில தலைமையின் முயற்சியால் அன்சாரி வெளி உலகத்துக்கு மாணவரணி செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்பு தமுமுகாவின் மாநில செயலாளராக பதவியில் அமர்த்தப்பட்டார். தமுமுகாவின் அன்சாரியாக இருக்கும் வரை மார்க்கத்துக்கு கட்டுப்பட்டு, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்கிய அன்சாரி மமக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் தனக்கு ஏற்பட்ட அரசியல் தலைவர்களின் தொடர்பு, தன்னையே சுற்றிவரும் தொண்டர்கள், தன்னுடைய பேச்சிக்கு கிடைக்கும் கைத்தட்டல்கள் என புகழ் மாலைக் கிடைத்ததைக்கண்டு சொக்கிப்போய் தலைக்கணமும் ஆணவமும் தலைக்கேறி இஸ்லாமிய நெறிமுறைகளை குழித்தோண்டி புதைக்க தொடங்கினார். தொழுகை நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை மாற்று மத சகோதரர்கள் வருத்தப்படுவார்கள். நிகழ்ச்சி துவக்கத்தில் கிராத் ஓதக்கூடாது. இது முஸ்லிம்களின் கட்சியல்ல என பல எழுதப்படாத சட்டங்களை போட்டார். அதுமட்டுமல்லாமல் மமக நிர்வாகத்தை தனியாக பிரிப்பதிலேயே குறியாக இருந்தார். அமீரகத்துக்கு வருகைதந்த ஹாருன் அவர்கள் இந்த செய்தியை சொன்னபோது அமீரக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மண்டல நிர்வாகிகளும் கடுமையாக எதிர்த்தனர். நிர்வாக பிரிப்பு கூடாது என கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மாநிலத்தலைவருக்கு கடிதம் எழுதினேன். என்னால் பிரச்சனை வந்துவிட்டதாக எங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் பொய்யான தகவலைக்கொடுத்தார் அன்சாரி. இப்படியாக உச்சக்கட்டமாக கடந்த ஒருவடத்திற்கு முன்பே மமக நிர்வாகத்தை பிரிக்கும் வேலையை துவங்கிவிட்டார். களத்தில் பணியாற்றக்கூடியவர்கள் யார், என்பதையெல்லாம் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தக்கூடியவர் அல்ல அன்சாரி. மமகவில் புதிதாய் சேர்ந்தவர்களுக்கு பதவியை கொடுத்து தனது ரசிகராய் மாற்றினார்.
தமுமுககாரனை இகழ்ந்து பேசுவதும், தமுமுக வளர்ந்துவிட்டது மமகவை வளர்க்க வேண்டும் என்றுக்கூறி தமுமுகாவை நேசித்து களப்பணி செய்த பலரை மமக நிர்வாகிகளாக மாற்றி தமுமுகாவை செயல் இழக்க செய்யும் வேலைகளை மறைமுகமாக செய்யத்தொடங்கினார். இவரால் நியமிக்கப்பட்ட சில ரசிகர்கள் தமுமுக டிசம்பர் -6க்கு மட்டும் போராட்டம் நடத்தினால் போதும். வேறு போராட்டம் ஏதும் நடத்த வேண்டியதில்லை. எல்லாம் மமக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லும் அளவுக்கு தமுமுக -மமகவில் பிளவுகளை ஏற்படுத்தினார். இவரின் வரம்பு மீறலையும், ஏதேச்ச திமிரையும், தான் தோன்றிதனத்தையும் என்னைப்போன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநிலத்தலைமையிடம் முறையிட்டதை தொடர்ந்து அதிராம்பட்டினம் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இவர் வரம்பு மீறி பேசி வெளிநடப்பு செய்ததை தொடர்ந்துதான் மாநிலத்தலைமை உயர்மட்டக்குழுவிற்கு அழைத்தும் வரவில்லை. தனி நிர்வாகக்குழுவை போட்டார். சென்னை எக்மோரில் ரூம் எடுத்து பல ரகசிய கூட்டங்களை கூட்டினார். அதேபோல் மதுரையிலும் இன்னும் சில மாவட்டங்களிலும் ரகசிய கூட்டங்களை தன்னுடைய சகாக்களின் மூலம் நடத்தினார். இவற்றை எல்லாம் அறிந்த தலைமை இவரின் நடவடிக்கையை பொதுக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்க தாம்பரம் பொதுக்குழு கூட்டப்பட்டது. தன்னைப்பற்றிய உண்மைகள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியவந்தால் தன்னை கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள் என்பதை உணர்ந்த அன்சாரி தனது அரசியல் நாடகத்தை துவக்கினார். போட்டி பொதுக்குழுவை அறிவித்தார். பிரச்னையை திசைதிருப்பி சமுதாயத்தின் பரிதாபத்தை பெற தன தியாகத்தை விளம்பரம் செய்தார். இவரின் தனிப்பட்ட முயற்சியில் இயக்கம் உருவானதுபோலவும், இவருக்கு மட்டுமே முழு உரிமை இருப்பதுபோலவும் மூத்த தலைவர்களை கொச்சைப்படுத்தி, லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகங்களை உதாசினப்படுத்தினார். அதன் பிறகு ஊடகங்களின் முன்பு பேசிய வீரவசனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். போட்டி பொதுக்குழுவில் நடத்தி ஒப்பாரி வைத்து தன் சர்வாதிகாரத்தை நிலை நிருத்தும் வகையில் தான்தான் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளர் என்றும், தனது நிர்வாகத்தின் கீழ் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பணியாற்ற வேண்டும் என்று கூறியிருப்பது. வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற பண்புக்கூட தெரியாத ஒருவர் கட்சியை வழிநடத்தினால் எதிர்கால தலைமுறைகள் தான்தோன்றித்தனமாக தறுதலைகளாக உருவெடுக்கும் அறிந்துதான் மாநிலத்தலைமை இவரை பதவியிலிருந்து நீக்கியது. இன்னும் இவர் கடந்தக்காலங்களில் முஸ்லிம் லீக் போன்ற சிறுபான்மை கட்சிகளை உடைத்த கட்சிகளோடு பேசிய பேரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ். எங்களை இறைவன் காப்பாற்றியிருக்கிறான். புகழ் அனைத்தும் இறைவனுக்கே.














0 thoughts on “இப்போது ஃபேஸ்புக்கில் யார் இந்த அன்சாரி?”