BREAKING NEWS

SPORT

Culture

Join the Club

Archive

clean-5

Recent comments

tamilnadu

Formulir Kontak

Name

Email *

Message *

Followers

Fashion

Technology

Fashion

Translate

Search

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேலிப்பருத்தி

OgAAABTSk_H9EB98ad-rXLsf6ZQU9GVt_QLVqTCSwKY6rEjn1BLENiXI5HTSgR_Hwc2PEkHW0nPJjRY4tdXPq3kYeH8Am1T1UGphrTN8iu_vPvIU1Jkc6AKUZfMq














வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும்.
இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும். குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
இதன் இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும். உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு வேலிப்பருத்தி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
வேலிப்பருத்திச் சாறு – 100 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 200 மி.லி
தேங்காய் எண்ணெய் – 300 மி.லி.
இவற்றை ஒன்றாகச்சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு, அடிபட்ட இடங்கள், வீக்கங்கள் மீது தடவி வந்தால் எளிதில் குணமாகும். இந்த வைத்திய முறை பழங்காலந்தொட்டே வழக்கமாக இருந்து வருகிறது.

http://indru.todayindia.info/blood-pressure-control-veliparuththi/?utm_source=Tamilan+Web+Media+Association&utm_medium=facebook


TAG

nanomag

Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Aenean commodo ligula eget dolor. Aenean massa. Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus.


0 thoughts on “இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேலிப்பருத்தி