இந்திய அளவில் 31 சதவீத மக்களின் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள மோடி அரசு சர்வாதிகாரமாக செயல்பட்டு வருகிறது என்றும், மாட்டிறைச்சியை காரணம் காட்டி முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கும் நீதிபதி ராஜேந்த சச்சார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாய்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நீதிபதி ராஜேந்திர சச்சார் கூறியதாவது: அண்மைக்காலமாக மாட்டிறைச்சி வைத்திருப்பதாக கூறி முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் 98 சதவீதம் இந்துக்களின் கையில்தான் உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி குறைந்தால் அது இந்தியா வின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறுபான்மை முஸ்லிம்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
வரலாற்றில் முகலாய மன்னர் அவுரங்க சீப் பற்றி தவறுதலாக சித்தரிக்கப் படுகிறது. இந்திய அளவில மொத்த வாக்காளர்களில் 30 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நரேந்திர மோடி அரசு எதேச்சதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
பள்ளிவாசல் கட்டும் விவகாரத்தில் அட்டாலி கிராமத்தில் ஜாட் இனத்த வருக்கும் - முஸ்லிம்களுக் கும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க ஹரி யானா அரசு தவறிவிட்டது என்றும் கூறினார்.
முஸ்லிம், தலித் என தங்களை அடையாளம் காட்டும்போது, அவர்களை வெளிநாட்டவராக இந்துத் துவா அமைப்புகள் சித்தரிக்கிறது என்று சமுதாய மேம்பாட்டு கல்வி மையத்தின் உதவிப் பேராசிரியர் ஹிலால் அஹமது தெரிவித்தார்.
ஜவஹர்லால்` நேரு பல் கலைக்கழகத்தில் நலத்திட் டங்கள் குறித்து விவாதிப்பதற்கான இளைஞர் அமைப்பு பெயரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அவற்றில், ‘‘ஹாஷிம் புரா, முரா தாபாத், பகல்பூர், நெல்லி, மும்பை, அயோத்தியா, குஜராத், முசாபர்நகர் மற்றும் தாத்ரி போன்ற சம்பவங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் சமூக வாழ்விலிருந்து முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மேலும் தாத்ரி சம்பவம் சிறு பான்மையினர்களின் உயிர்களை விட மாட்டிறைச்சிக்கு அதிக மதிப்பளிக் கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
Link: http://www.dinamani.com/india/2015/10/25/மாட்டிறைச்சிக்காக-முஸ்லிம/article3096915.ece














0 thoughts on “மாட்டிறைச்சிக்காக முஸ்லிம்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: நீதிபதி ராஜேந்திர சச்சார் பேச்சு”