வாஷிங்டன்: வரும் 31-ம் தேதி பூமியை மிகப்பெரிய விண்கல் கடந்து செல்ல இருப்பதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மிர்ரர் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாகவது: சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 10-ம் தேதி மிகப்பெரிய விண்கல் ஒன்றை கண்டறிந்தது. இதற்கு 2015 டி.பி. 145 என பெயரிட்டுள்ளது. 280 முதல் 620 விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியில் இருந்து 74,02,982 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது பூமியை நோக்கி 1,25,529 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. வரும் 31-ம் தேதி பூமியை கடந்து செல்லும். இந்த நிகழ்வால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Link: http://www.dinamalar.com/news_detail.asp?id=1367731













0 thoughts on “31-ம் தேதி பூமியை கடந்த செல்கிறது மிகப்பெரிய விண்கல்: நாசா தகவல்”