தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு தனியார் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு, அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வோர்களின் உடைமைகள் திருட்டு போவதும், பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும் பெருகிவருகின்றன.
இதனால், இவற்றில் பயணிப்போர் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பயணிகள் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளின் உடைமைகள் திருடு போவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் 10 சதவீத பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.














0 thoughts on “ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய இனி அடையாள அட்டை கட்டாயம்”