ஹரியானா மாநிலத்தில் நடந்த தலித் படுகொலை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தை அங்குள்ள தாக்கூர் சாதியினர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டரை வயது ஆண் குழந்தையும் 11 மாத பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி இறந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் குடும்பத்தைக் கொளுத்திய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப் போவதாக ஹரியானா முதலமைச்சர் கூறியிருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசின் சிபிஐ விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அதன் நேரடி கண்காணிப்பில் இந்தப் படுகொலை குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
http://ippodhu.com













0 thoughts on “’தலித் படுகொலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’”