பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி அக்டோபர் 02 முதல் 30 வரை தொடர் ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் SDPI கட்சி நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் SDPI கட்சியின் சார்பாக திருவள்ளுவர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் மது விலக்கை அமல்படுத்துவதில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து மது அருந்தி இறந்த மனிதனிடம் மனு கொடுக்கும் வித்யாசமான நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவர் முஸ்தஃபா, மாவட்ட பொது செயலாளர் இப்ராகிம் பாதுஷா மற்றும் SDPI கட்சியின் செயல்வீரர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டணர்.














0 thoughts on “பூரண மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!”