
தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற 5 கி.மீ அளவிலான ...
தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற 5 கி.மீ அளவிலான மினி மராத்தான் - சாலை ஓட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவர் அளித்த பேட்டி!
Posted by Popularfrontnews Tn on Sunday, October 18, 2015
நாட்டு மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்பற்ற நிலையிலும், அடிப்படை சுகாதாரம் பற்றிய அக்கறை இல்லா நிலையிலும் அரசுத்துறைகளும், அதிகாரிகளும் இருந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னையும் வளப்படுத்தி, பலப்படுத்தி பாதுகாத்திடவும், அதன் மூலம் சமூகத்தையும், தேசத்தையும், பாதுகாத்திடவும் சிந்தனைகளை ஏற்படுத்திட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடந்தோறும் தேசம் தழுவிய அளவிலே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வருடத்தின் மாநில துவக்க நிகழ்ச்சியாக 5 கி மீ அளவிலான மினி மராத்தான் - சாலை ஓட்டம் நிகழ்ச்சி இன்று காலை 7 மணியளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் ஆண்களுக்கான ஓட்டத்தை மாவட்ட தடகள சங்க தலைவர் திருமிகு கிருஷ்ண சாமி வாண்டையார் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பெண்களுக்கான சாலை ஓட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் J.Mohamed Rasin அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
2800 நபர்கள் கலந்து கொண்ட இந்த சாலை ஓட்டம் தஞ்சை அரண்மனை வளாகத்தினை சென்றடைந்தது.
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை அரண்மனை வளாகத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
நிகழ்ச்சியில் தற்காப்பு கலையின் அவசியத்தை கற்பிக்கும் வகையில் டெல்டா மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவினரின் டெமோ நிகழ்ச்சி நடைபெற்றது .
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஜர்ஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பாப்புலர் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் J. முஹம்மது ரஸீன் அவர்கள் தனது சிற்றுரையை சிறப்புரையாக்கி " மக்களின் ஆரோக்கியம் தான் ஒரு தேசத்தின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை."
எனவே தான் பாப்புலர் ஃப்ரண்ட் மக்களின் ஆரோக்கியத்தில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
எனவே தான் பாப்புலர் ஃப்ரண்ட் மக்களின் ஆரோக்கியத்தில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரியின் முதல்வர்
மரு. சிங்காரவேலு அவர்கள் ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மரு. சிங்காரவேலு அவர்கள் ஆரோக்கியத்தின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
" Stay fit " எனும் உடற்பயிற்சி செயல்முறை விளக்க குறுந்தகடு "CD " வெளியிடப்பட்டது.
முதல் ஏழு இடங்களை பிடித்த ஆண்கள்,
மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கெளரவிக்கபட்டது.
மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கெளரவிக்கபட்டது.
கலந்து கொண்ட 2800 நபர்களுக்கும் பங்கு பெற்றமைக்கான சான்றிதழ்களும் வழங்கபட்டது.













0 thoughts on “தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற 5 கி.மீ அளவிலான மினி மராத்தான் ”