மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கப்பட்டுள்ளார். சென்னை தாம்பரத்தில் கட்சித் தலைவர் ரீபாயீ தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஆருண் ரஷீத்தும் நீக்கப்பட்டுள்ளார். இருவரும் மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தன் மீதான நடவடிக்கை குறித்து எழும்பூரில் ஆதரவாளர்களுடன் தமீமுன் அன்சாரி ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்க உள்ளார்.
http://www.lalpettimes.com/2015/10/blog-post_65.html














0 thoughts on “மமக-வில் இருந்து தமீமுன் அன்சாரி நீக்கம்”